Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆட்டிறைச்சி விலை நிர்ணயம்- தமிழக அரசு முடிவு

 

சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் தேசிய அளவிலான  கால்நடை கருத்தரங்கு நடைபெற்றது. இது தொடர்பாக கால்நடைத்துறை பராமரிப்பு செயலாளர் டாக்டர் என்.சுப்பையன் கூறுகையில், “தினமும் முட்டை விலை, பிராய்லர் கோழி விலை நிர்ணயிக்கப்படுவது போல் ஆடு, மாடு, கோழி விலையையும் மாநில அரசே நிர்ணயம் செய்யும்.

தினமும் விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் தமிழ்நாடு வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் புதிய இணையதளம் உருவாக்கப்படும். ஆடு மற்றும் கோழி உயிருடன் என்ன விலை,இறைச்சி என்ன விலை? எனவும் தினசரி அப்டேட்டில் சொல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு ஆட்டிறைச்சி மற்றும் கால்நடைகள் விற்கப்படுவது தடுக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

error: Content is protected !!