திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கடைமுன் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா வேனில் டீசல் திருட்டு. சிசிடிவி காட்சிகள் வெளியானது. காரில் வந்து திருடும் மர்ம கும்பல்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை, மதுரை சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் பிரிண்டர்ஸ் மற்றும் டிராவல்ஸ் கடை வைத்திருப்பவர் செல்வன். இவர் வழக்கம்போல் தனது சுற்றுலா வேனை கடையின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
மீண்டும் வந்து பார்த்தபோது வண்டியில் இருந்த டீசல் டேங்கின் மூடி சேதமடைந்த நிலையில் கிழே கிடந்ததோடு டீசலும் தரையில் சிந்தி இருந்துள்ளது. இதனைகண்டு அதிர்ச்சியடைந்த செல்வன் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காடசிகளை ஆய்வு

செய்துள்ளார். அதில் அதிகாலை 4 மணியளவில் வேனிற்கு முன்பு வந்து நிறுத்தப்பட்ட ஒரு காரில் இருந்து இறங்கி வரும் மர்ம நபர் ஒருவர் வேனின் அடிப்பகுதியில் லாவகமாக நுழைந்து செல்லும் காட்சியும், பின்னர் வேனில் இருந்து கேனில் டீசலை எடுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. வண்டியின் டீசல் டேங்கில் முழு அளவு டீசல் இருந்த நிலையில் இன்று

பார்த்தபோது பாதிக்கும் குறைவான டீசலே இருந்துள்ளது. 30 – 40 லிட்டர் டீசல் வரை திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து செல்வன் மணப்பாறை போலீசில் புகார் அளித்தார். சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் டீசல் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த பகுதியில் அதிகாலையில் மர்ம நபர்கள் காரில் வந்து டீசலை திருடிச்சென்ற சம்பவம் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
