Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆட்டோ டிரைவர் பல்லை உடைத்த மர்ம நபர்கள்.. திருச்சி க்ரைம்

ஆட்டோ டிரைவரை தாக்கி பல்லை உடைத்த மர்ம நபர்கள்

திருச்சி, கீழகல்கண்டார் கோட்டை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (51 )ஆட்டோ டிரைவர் . இவர் தன் ஆட்டோவில் பயணிகளுடன் கன்டோன்மென்ட் வரை சவாரி சென்றார். அப்போது அவரது ஆட்டோவின் பின்னே 2 அடையாளம் தெரியாத நபர்கள் டூவீலரில் வந்து மோதினர். இதுகுறித்து மோகன்ராஜ் அவர்களிடம் கேட்டபோது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அந்த மர்ம நபர்கள் மோகன்ராஜை வாயில் தாக்கி பல்லை உடைத்தனர் காயம் அடைந்த மோகன்ராஜ் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் இதுகுறித்து கண்ட்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரும்பு கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு- வாலிபர் கைது

திருச்சி, பாலக்கரை காஜா பேட்டை வேம்படி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (51 ) இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார் . அதே பகுதியைச் சேர்ந்தவர் திலீபன் ராஜ் (25 ) . இவர்கள் இருவருக்கும் இடையே சிறிய தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் துரைராஜ் நேற்று இரவு வீட்டின் அருகே நடந்து சென்ற போது திலீபன் ராஜ் டூவீலரில் துரைராஜ் மீது மோதினார் இது குறித்து கேட்டபோது திலீபன்ராஜ் அரிவாளால் அவரை வெட்டினார். காயமடைந்த துரைராஜ் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து திலீபன் ராஜை கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமீனில் வெளியே விட்டனர்.

காதல் திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் தற்கொலை..

திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (33) ஆட்டோ டிரைவர் .அதே பகுதியைச் சேர்ந்த நஜிமா பேகம் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் இனாம்தார்தோப்பு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். நஜிமா பேகம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் .இந்த நிலையில் ராஜா அதிகப்படியாக வீட்டு செலவிற்கு கடன் பெற்றதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து நேற்று கடன் கொடுத்தவர்கள் ராஜாவின் வீட்டிற்கு வந்து கடமை திரும்ப கட்டுமாறு கேட்டனர். இதனால் ராஜா மன உளைச்சலில் இருந்து வந்தார் .
இதைத்தொடர்ந்து நஜிமா பேகம் மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்தபோது ராஜா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிந்து,ஆட்டோ டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் வாலிபர் பலி..

திருச்சி உயக்கொண்டான் திருமலை இரட்டை வாய்க்கால் மேற்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் ராகவன் ( 19 ) இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம். (17 )இவர்கள் இரண்டு பேரும் டூவீலரில் கன்டோன்மென்ட் மேஜர் சரவணன் சாலை அருகே சென்று கொண்டிருந்தனர் . அப்போது மற்றொரு வாகனத்தை முந்த முயன்ற போது நிலை தடுமாறி இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் ஸ்ரீராம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் உடனடியாக 2 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு ஸ்ரீராம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தெற்குப் போக்குவரத்துக் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!