Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. மீன்வளத்துறை உத்தரவு

வங்கக்கடலில்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று நாகை மாவட்ட மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

விசைப்படகு மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல வழங்கப்பட்டு வந்த டோக்கன் நிறுத்தப்பட்டு விட்ட நிலையில் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி கட்டி வைத்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக  இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!