Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாகையில் ”ஹெல்மெட்” அணிவதன் விழிப்புணர்வு பேரணி….

வட்டார போக்குவரத்து துறை சார்பில் நாகையில் 35-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜனவரி 15,ஆம் தேதி முதல் இம்மாதம் 14ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று நாகையில் இருசக்கர வாகனம் பயன்படுத்துபவர்கள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து

விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அவுரித்திடலில் துவங்கிய இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்றடைந்தது. அப்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!