Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் விஜய் நேரடி கண்காணிப்பில் போதை பொருட்கள் தடுப்பு படை

15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு

விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதும், விழா மேடையிலேயே முதலமைச்சராக அவர் தனது முதல் உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

குறிப்பாக, முதல் கையெழுத்தாக, தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.(500 யூனிட்டுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு)

அதைத் தொடர்ந்து, போதைப் பொருள் தடுப்புக்கு மாவட்டந்தோறும் சிறப்புப் படை அமைப்பது மற்றும் பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை அமைப்பது ஆகிய உத்தரவுகளையும் விஜய் பிறப்பித்தார்.

இந்நிலையில் முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் போதை பொருள் தடுப்பு படை உருவாக்கப்படும் என அரசாணை வெளியாகியுள்ளது.மேலும் 65 இடங்களில் போதை பொருள் தடுப்பு படை காவல் நிலையங்கள் அமைப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 காவல் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ,

முதலமைச்சர் அவர்கள் “முதலமைச்சரின் நேராடி மாண்புமிகு கண்காணிப்பில் போதைப் பொருட்கள் தடுப்புப் படை உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.மேற்கண்ட அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் மேலே படிக்கப்பட்ட கடிதத்தில், காவல் துறை தலைமை இயக்குநர் அவர்கள். தமிழ்நாட்டில் பரவிவரும் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டு, போதைப் பொருட்கள் தடுப்புப் படை (Anti-Narcotic Task Force) காவல் நிலையங்கள் அமைக்கலாம் என்றும் இக்காவல் நிலையங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 காவல் நிலையங்களும். 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்களும் (12 சென்னை, தலா 2 வீதம் ஆவடி, தாம்பரம், சேலம், கோயம்பத்தூர், திருப்பூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி) ஆக மொத்தம் 65 போதைப் பொருட்கள் தடுப்புப் படை (Anti-Narcotic Task For நிலையங்கள் அமைக்கலாம் என்றும் தெரிவித்து, இதுகுறித்து உரிய அரசாணை வெளியிடுமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!