Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீட் தேர்வு முறைகேடு… என்.டி.ஏ தலைவரிடம் விசாரணை

டில்லியில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் சிபிஐ (CBI) உயர் அதிகாரிகளிடம் மிகக் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களவையின் அரசாங்க உத்தரவாதங்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் (Committee on Government Assurances) முன்பாக, தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைமை இயக்குநர் அபிஷேக் சிங் மற்றும் சிபிஐ (CBI) இயக்குநர் பிரவீன் சூட் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

“நீட் வினாத்தாள் எதுவும் கசியவில்லை என்று என்.டி.ஏ (NTA) தரப்பில் கூறப்பட்டால், பிறகு எதற்காக ஒட்டுமொத்தத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்?” என்று நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் NTA மற்றும் கல்வி அமைச்சக உயர் அதிகாரிகளிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

இந்தத் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ நாடு முழுவதும் நடத்தி வரும் விசாரணையின் தற்போதைய நிலவரம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டிடம் நாடாளுமன்றக் குழு கேட்டறிந்தது.

error: Content is protected !!