Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நெல்லை பகீர்… மருத்துவ கழிவுகளுக்கு மர்ம நபர்கள் தீவைப்பு

நெல்லை: சிவந்திபட்டி அருகே உள்ள காட்டுப் பகுதியில் மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் மலையாக குவித்து வைத்துவிட்டு தீவைத்து தப்பினர். கழிவுகள் கொழுந்துவிட்டு எரிந்ததால் காற்றில் டையாக்ஸின் போன்ற கொடிய நச்சு கலந்து அப்பகுதி முழுவதும் கடும் சுகாதார சீர்கேடு உருவானது. நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள சிவந்திபட்டி போலீசார், மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!