Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் ”நியோ டைடல் பார்க்”.. முதல்வர் அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களின் நீண்ட நாள் கனவான ஐ.டி. துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், புதுக்கோட்டையில் ‘நியோ டைடல் பார்க்’ (Neo Tidel Park) அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து விடுத்த கோரிக்கையை ஏற்று, அதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் முக. ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (11.03.2026) நடைபெற்ற விழாவில் காணொலி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் இந்த நியோ டைடல் பார்க்கிற்கு அடிக்கல் நாட்டி சிறப்பித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதனை யொட்டி திருச்சி சாலை சிப்காட்
நியோ டைடல் பார்க் வளாகத்தில் நடந்த விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எம் எம். அப்துல்லா, வடக்கு மாவட்ட திமுக. செயலாளர் கே கே. செல்ல பாண்டியன், எம்எல்ஏக்கள்,வை. முத்துராஜா, எம். சின்னதுரை , மாநகர மேயர் திலகவதி செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!