காட்மாண்டு: நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தின் போது திரிசூலி நீர்மின் திட்டச் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்ட இருவர், 9 நாட்களுக்குப் பிறகு அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தில் காணாமல்போன சுமார் 5,000 பேரைக் கண்டறியும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த இருவரின் மீட்பு சம்பவம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
