Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நேபாள வௌ்ளம்-பஸ் கிடைக்கவில்லை.. அதுவே ஒரு நல்ல விஷயம் தான்.. மகன் நம்பிக்கை

பேருந்து இதுவரை கிடைக்கவில்லை அதுவே ஒரு நல்ல விஷயம் தான். அதனால் அவர்கள் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக காணமல் போனவரின் மகன்நம்பிக்கை.

தஞ்சாவூர் ஜே ஜே நகரை சேர்ந்த சிவயோகம் என்பவரின் நிலை இதுவரை தெரியவில்லை. இது குறித்து பேட்டி அளித்த அவரது மகன் அசோக், அவரை தேடுவதற்காக டிஎன்ஏ டெஸ்ட் கொடுத்துள்ளேன். தற்போது ரத்த மாதிரிகள் கொடுத்துள்ளேன். அம்மா கூட பிறந்தவர்கள் இரத்த மாதிரிகள் கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறேன். எந்த தகவல் இருந்தாலும் தெரிவிப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அங்கு நடைபெறும் தேடுதல் குறித்த தகவல்களை உடனடியாக தெரிவித்து வருகிறார்கள். அங்கு தேட முடியாத கடினமான சூழ்நிலை உள்ளது. அங்கிருந்து எந்த செய்தியும் இதுவரை வரவில்லை. பேருந்து இதுவரை கிடைக்கவில்லை அதுவே ஒரு நல்ல விஷயம் தான். அதனால் அவர்கள் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!