திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை பரிசோதனையை விரைவாக மேற்கொள்ளும் வகையில், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத்துறை சார்பில் “<https://play.google.com/store/apps/details?id=com.org.customnew&hl=ta>அதிதி 2.0<<>>” என்ற கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் விமான பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பு, தாங்கள் கொண்டு செல்ல உள்ள உடைமைகளை பதிவு செய்து கொண்டு, தங்கள் சுங்கத்துறை பரிசோதனையை எளிதாக்கிக் கொள்ளலாம் என, திருச்சி சுங்கத்துறை ஆணையரகம் தெரிவித்து உள்ளது.
