Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் 50 மின் விளக்குகள்…அமைச்சர் செந்தில் பாலாஜி இயக்கி வைத்தார்…

கரூர் அண்ணா சாலை பகுதியில் பல ஆண்டுகளாக மின்விளக்குகள் இல்லாமல் இருந்ததால், பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே மின் விளக்குகள் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கை ஏற்று கரூர் மாநகராட்சி பொது நிதி ரூ.31 லட்சத்தில் குளத்துப்பாளையம் குகை வழி பாதை முதல் புகழூர் ரோடு மேம்பாலம் வரை 50 மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. அண்ணாசாலையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மின் விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், மேயர் கவிதா கணேசன், எம்எல்ஏக்கள், மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!