ரயில் பயணம் வசதியானதாகவும் மலிவானதாகவும் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களின் முதல் விருப்பமாக ரயில் போக்குவரத்து இருக்கிறது. ஊருக்கு செல்வது உறுதியாகிறதோ இல்லையோ முதலில் ரயிலில் டிக்கெட் எடுத்து வைத்து பிறகு கடைசி நேரத்தில் ரத்து செய்வதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில், உறுதி செய்யப்பட்ட முன்பதிவு ரயில் டிக்கெட்டை ரத்து செய்வதற்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. பயணியர் அட்டவணை தயாரிக்கப்படும் நேர மாற்றத்திற்கு ஏற்ப ரயில் டிக்கெட்டை ரத்து செய்வதற்கான கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 3 நாட்களுக்கு முன்பு ரயில் டிக்கெட்டை ரத்து செய்தல் மட்டுமே முழு கட்டணமும் திரும்ப கிடைக்கும். அதாவது ரயில் புறப்படுவதற்கு 72 நேரத்திற்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தால், ரத்து செய்ததற்கான கட்டண பிடித்தம் செய்தது போக, மீதி கட்டணம் திரும்ப கிடைக்கும். ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தல் 75 சதவீத கட்டணம் மட்டுமே திரும்ப கிடைக்கும். ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பு. டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவீத கட்டணம் மட்டுமே திரும்ப வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

