Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நெக்ஸ்ட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு…

இளநிலை மருத்துவ படிப்பு முடித்த மாணவர்கள் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர ‘பி.ஜி. நீட்’ என்கிற தேர்வை எழுதி வந்தனர். இந்த நிலையில், அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் ‘நெக்ஸ்ட்’ எனப்படும் புதிய தேர்வு முறையை அறிமுகம் செய்துள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் முதல் இந்த நெக்ஸ்ட் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், நெக்ஸ்ட் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் மருத்துவ கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர்.
இந்நிலையில், நெக்ஸ்ட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையிடம் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெக்ஸ்ட் தேர்வை கைவிடக்கோரி பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!