Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தற்போது பரவும் கொரோனா வீரியம் குறைந்தது…. அமைச்சர் மா.சு.

இந்தியா  முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை  இன்றும், நாளையும்  நடக்கிறது.  இதன் மூலம் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன், மருந்து , மாத்திரைகள், படுக்கைகள், கவச உடைகள்,  தயாராக இருக்கிறதா என்பது ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஒத்திகை இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடந்தது. இதனை  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

கொரோனா இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இல்லை.   வீட்டில் இருந்தபடிதான் சிகிச்சை பெறுகிறார்கள். அவர்களுக்கு ஆக்சிஜன் தேவை என்ற நிலை ஏற்படவில்லை. இந்தியாவில் 35, 199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  தமிழ்நாட்டில் உள்ள 11 ஆயிரம் அரசு ஆஸ்பத்திரிகளிலுதட  இன்று கெரோனா தடுப்பு ஒத்திகை நடக்கிறது.   இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 5,880 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  தற்போதுள்ள புதிய வகை கொரோனா வீரியம் குறைவாகவே உள்ளது. தமிழ் நாட்டில் 64,281 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.  7797 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. நாளையும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!