Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இனி கொடைக்கானலை இலவசமா சுற்றிப பார்க்கலாம்

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் கொடைக்கானல் நோக்கி குவிந்து வருவதால் நகரம் முழுவதும் சுற்றுலா சூழல் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, கொடைக்கானல் மலைப்பாதை, வனத்துறை கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் முக்கிய பார்வை இடங்களின் அருகே வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலாப் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் வருகை தருவதால், சாலை திறன் மீறி நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, போக்குவரத்து மாற்றங்கள், ஒருவழிப் போக்குவரத்து நடைமுறை மற்றும் நெரிசல் பகுதிகளில் தற்காலிக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொடைக்கானலில் 4 சுற்றுலா தலங்களை கட்டணமின்றி காணலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கொடைக்கானலில் மே 31-ந்தேதி வரை 4 சுற்றுலா தலங்களை கட்டணமின்றி காணலாம். தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய இடங்களை கட்டணமின்றி காணலாம்.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சாலை போக்குவரத்தினை எளிதாக்கும் வகையில் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி சுற்றுலா தலங்களை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!