தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி கூட்டமைப்பு சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடைபெற்றது. இன்று 14-வது நாளாகவும் போராட்டம் தொடர்ந்தது. இன்று கருப்பு உடை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட கன்வீனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கனகலெட்சுமி, வித்யா, ஜெயசீலி,தீபா, அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் சுரேஷ் தொடக்க உரையாற்றினார். சத்துணவு ஓய்வு பெற்ற நல சங்க மாநில செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மதியழகன், மாவட்ட செயலாளர் நாவலரசன், நிர்வாகி கோமதி ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் ஆறுமுகம் நிறைவுரையாற்றினார். ஓய்வ பெற்றோர் சங்க பொருளாளர் உமா நன்றி கூறினார். போராட்டத்தில், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்னு இளநிலை உதவியாளர் நிலையில் ரூ.19500, சமையல் உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் நிலையில் ரூ.15700 என்ற அடிப்படையில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. இதில் ஏராயமானோர் கலந்து கொண்டனர்.

