அரியலூர் மாவட்டம் ஓ. கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில்களின் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஓ. கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ காமன் திருக்கோயில்கள் உள்ளன. இக்கோவில்களுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை, கோவிலை பூனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவது கிராம மக்களின் வழக்கமாக உள்ளது. இதன்படி பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கோயில்களை புணரமைத்து புதுப்பித்தனர். கோவில் வளாகம் அருகில் அமைக்கப்பட்ட யாகசாலையில் நேற்று கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மூன்றாம் கால யாக பூஜைகள் முடிவுற்று, யாத்ரா தானம் கடம் புறப்பாடு, மேளதாளத்துடன் தொடங்கியது. புனித கலசத்தை எடுத்துச் சென்ற சிவாச்சாரியார்கள், ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ காமன் திருக்கோவிலின் விமானம் மற்றும் மூலஸ்தானத்தில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்ததோடு சுவாமி தரிசனம் செய்தனர். ஓட்ட கோவில், நல்லாம்பத்தை உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
