பான் மசாலா மற்றும் குட்கா விளம்பரங்களில் நடிக்கும் பாலிவுட் பிரபலங்கள், முதலில் அப்பொருட்களை தாங்களும் தங்களது குழந்தைகளும் பயன்படுத்த விட்டு பார்க்கட்டும் என மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டே விமர்சித்துள்ளார். விளம்பரம் என்பது பணத்திற்காக முகம் காட்டுவது மட்டுமல்ல என்றும், சமூகத்திற்கு கொண்டு சேர்க்கும் செய்தியில் பொறுப்புடைமை வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.எனவே, பாலிவுட் நடிகர்கள் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பான் மசாலா விளம்பரங்களுக்கு அதிகாரி கண்டனம்
