Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவர்கள் தூங்கும் நேரத்தில் திருட்டு! CCTV-யில் சிக்கிய மர்ம நபர்

மாணவர்கள் தூங்கும் நேரத்தில் திருட்டு! CCTV-யில் சிக்கிய மர்ம நபர்

கோவை சிட்ரா முதல் காளப்பட்டி செல்லும் சாலையில், என்.ஜி.பி. கல்லூரி எதிரே உள்ள வி.எல்.கே. கார்டன் குடியிருப்பில் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

காலை 6.10 மணிக்கு, அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நேரத்தில், குடியிருப்புக்குள் நுழைந்த மர்ம நபர் முதல் மாடிக்குச் சென்றுள்ளான்.

அங்கு இருந்த 2 மொபைல் போன்கள், டெல் மற்றும் ஹெச்.பி. லேப்டாப்கள், வாட்ச் மற்றும் பர்ஸ் உள்ளிட்ட பொருட்களை திருடிக் கொண்டு தப்பிச் சென்றான்.

சிசிடிவி காட்சியில், முதலில் வெறும் கைகளுடன் வரும் அந்த நபர், பின்னர் ஒரு பேக்குடன் திரும்பிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

இதனால், குடியிருப்பில் தங்கியிருப்பவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மாணவர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!