நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ரசுவா மாவட்டத்தின் பல கிராமங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், வெள்ளத்தில் தவித்த 45 நாட்களேயான பச்சிளம் குழந்தையை நேபாள ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட குழந்தை அவசரக்கால மீட்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. வெள்ள பாதிப்பிலிருந்து பச்சிளம் குழந்தையை ராணுவ வீரர்கள் அணைத்து பாதுகாத்த நெகிழ்ச்சியான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
