Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரு லட்சம் வளையல் அலங்காரத்தில் ஜொலித்த வராகி அம்மன்….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பிரம்மதீர்த்தம் சாலையில் பிரசித்திபெற்ற வரம் தரும் வராகி அம்மன் ஆலயம் உள்ளது. ஆடி பூரத்தை முன்னிட்டு அருள்மிகு வராகிஅம்மனுக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர், சந்தனம், நல்லெண்ணை, திருமஞ்சள், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிசேகம்

நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து1 இலட்சம் வளையல்களைக் கொண்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

தொடர்ந்து மகா தீபாராதணை நடைபெற்றது, வளையல் அலங்காரத்தில் ஜொலித்த வராகி அம்மனை தரிசித்தால்,வழக்கில் வெற்றி பெற, நோய்கள் நீங்க நலம் பெற,திருமண தடை நீங்கிட,வீட்டில் பணம் தங்கிட

உள்ளிட்ட பல்வேறு பலன்கள் கிடைப்பதால் திரளான பக்தர்கள் மனம் உருகி வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!