தமிழக முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை உரையில் திமுக தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தியாகங்கள் கொச்சைப்படுத்தப்பட்டதாகக் கூறி, அதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று (செப்டம்பர் 12) காலை 10.30 மணிக்குத் தமிழகத்தின்

அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தவெக அரசு தனது ஆட்சித் தோல்விகளையும், சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகளையும் திசைதிருப்பச் சட்டமன்றத்தை டயலாக் பேசும் தளமாக மாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அவையின் மாண்பைக் குலைக்கும் வகையில் கொச்சையாகப் பேசிய முதல்வரைக் கண்டித்து, மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றுத் தங்களது கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
