Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு – ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நத்தமாடிப்பட்டி கிராமமக்கள் .

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக நத்தமாடிப்பட்டி மற்றும் அருகில் உள்ள சில கிராமங்களில்
கையகப்படுத்தப்படும் நிலங்கள் பெரும்பாலும் விவசாய நிலமாக உள்ளது .

எனவே, தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கிராம விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், விமான நிலைய விரிவாக்கம் பணிக்காக நத்தமாடிப்பட்டியிலிருந்த பொன்மலை செல்லும் சாலை மூடப்படும் அபாயம் உள்ளது. எனவே, திருச்சிக்குள் வருவதற்கான முக்கிய இணைப்புச் சாலையாக இருப்பதால் மக்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு உரிய இழப்பீடு அல்லது மாற்று இடம் வழங்கிய பின்னர் தான் நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள தமிழ்நாடு அரசு நீர்வள ஆதாரத்துறையின் ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் பல்வேறு விவசாய அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!