Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓபிஎஸ் மேல்முறையீடு…ஏப்.20ம் தேதி இறுதி விசாரணை

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை)நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் முன்  மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டுமென ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.. தற்போது உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. நாங்கள் புதிய உறுப்பினராக சேர முடியாத நிலை உள்ளது.  எங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்.எவே இடைக்கால  நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் தரப்பு  நீதிபதிகள் அமர்வு முன்பு முறையிட்டது.

நேரடியாக இறுதி விசாரணைக்கு தயார் என இருதரப்பும் பதில் அளித்த நிலையில்,  இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் மறுத்து விட்டனர். இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அது சிக்கலை ஏற்படுத்திவிடும் என கூறிய நீதிபதிகள் வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!