Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டில்லி அழைப்பு…. ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பாஜக-அதிமுக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்து உள்ளார். இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துக்கொள்ள ஓபிஎஸ் தீவிரமாக உள்ளார்.  இதற்கிடையே டில்லியில் இருந்து அவருக்கு அழைப்பு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன்,  மருது அழகுராஜ் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!