கர்நாடக முதலமைச்சர் விரித்து உள்ள தீய வலையில் நம் முதலமைச்சர் சிக்கி விட கூடாது.
பின்னர் செய்தியாளர்களிடம்
பி.ஆர்.பாண்டியன் பேட்டி:
தமிழ்நாடு அரசு புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தமிழ்நாடு முழுவதும் நான்கு மண்டலங்களில் வேளாண் பட்ஜெட் தொடர்பான கருத்து கேட்டு கூட்டத்தை விவசாயிகளிடம் நடத்தியது.
நிறைவு கட்டமாக சென்னையில் பல்வேறு மாவட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்பு நடக்கிறது.
பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் பங்கேற்று உள்ளார்கள்.
இந்த கருத்து கேட்பது கூட்டம் பல்வேறு துறை அதிகாரிகள் சார்ந்த கூட்டம் என்பதால் விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்ற நம்பிக்கையோடு கருத்துக்களை தெரிவித்துள்ளோம்.
குறிப்பாக காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை சட்டப்படி மட்டுமே தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டு இனி பேச்சுவார்த்தை கிடையாது என்று தெரிவித்துள்ளது
பேச்சுவார்த்தையை இரண்டு மாநில முதலமைச்சர்கள் தொடரக்கூடாது அது பயனற்றதாகிவிடும் சட்டப்படி அது செல்லாது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு மாவட்ட அளவில் தோட்டப்பயிர் கொள்முதல் செய்ய விலை நிர்ணய குழுக்களை அமைக்க வேண்டும்.
நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3500க்கு கரும்பு டன்னுக்கு 4500 ரூபாய் என்ற தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது அடிப்படையில் கொடுக்க வேண்டும்.
100% சிறு விவசாயிகளுக்கும் 50% பெரு விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
நிதி சுமை சீராகும் வகையில் நிதி தள்ளுபடி நிறுத்தி வைக்கலாம் கட்டாய வசூலை நிறுத்தி வைக்கலாம்.
இந்த ஆண்டு இரண்டு லட்சம் ஏக்கருக்கு உள்ளாக நிலத்தடி நீரை சார்ந்து டெல்டாவில் விவசாயம் செய்யப்படுகிறது அந்த நீரும் சரி இல்லாததால் பயிர் கருகிப் போகிறது.
ஏரி குளங்களை தூர்வார வேண்டும்.
60 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணை வறண்டு போய் உள்ளது.
எள் வினோ தாக்குதலால் உயர்மட்ட குழுவை காவிரி பாசனத்திற்கும் டெல்டா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைத்து உரிய ஆய்வு செய்து வறட்சி நிவாரண திட்டங்களை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே ஜெயலலிதா அவர்கள் வரட்சி நிவாரண நிதி வழங்கி மக்களை காத்திருக்கிறார்கள் அதுபோல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு பாதுகாப்பு திட்டங்கள் காப்பீடு தனியார்க்கு அனுமதிக்க கூடாது தேசிய வேளாண் காப்பீடு மட்டுமே விவசாயிகளுக்கு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கிறோம்.
பல்வேறு துறை அதிகாரிகளும் இதை கூர்ந்து கவனித்திருக்கிறார்கள்.
இந்த பட்ஜெட் நம்பிக்கையான விஷயத்தை கொண்டு வரும் என்று நம்புகிறோம்.
கடந்த காலங்களில் வெறும் பட்ஜெட் வாசிப்பாக இருந்தது உங்கள் ஆட்சியில் வயிறு வாரிய முறை அடிப்படையில் நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.
மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநில முதலமைச்சர்கள் பேச வேண்டியதில்லை என்று வலிமையாக தெரிவித்திருக்கிறோம்.
பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியில் முடிந்ததால் விவசாயிகள் தற்கொலை செய்யும் அளவிற்கு சென்றதால் இனி பேச்சுவார்த்தை சரியாக இருக்காது என்று நீதிமன்றத்தில் தெரிவித்ததால் நீதி அமைச்சர்கள் இரு மாநில முதலமைச்சர்கள் சந்தித்து பேச ஏற்பாடு செய்தார்கள்.
அந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் வறட்சி தீவிரமடைந்துள்ளது தற்கொலை தீவிரமடைந்துள்ளது. விவசாயம் அழிந்து வருகிறது நிலத்தடி நீர் பறிபோய் உள்ளது என்பதை ஆதாரத்தோடு எடுத்துரைத்து தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஒட்டுமொத்தமாக எங்களுக்கே போதாத நிலையில் தண்ணீரை வழங்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தார்கள்
உச்சநீதிமன்ற நீதி அரசர்கள் தெளிவாக உத்தரவிட்டு உள்ளார்கள் இனி தமிழ்நாடு கர்நாடகா இடையே காவிரி குறித்து முதலமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை இனி கிடையாது. இன்றைய பேச்சுவார்த்தை கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதான் அன்றைய பிரதமர் மன்மோகன் தூங்குகிறாரா அவர்தான் தமிழ்நாட்டுக்கு பிரதமர் என்பதை உணர்ந்து நீரைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
உச்சநீதிமன்றம் 2013ல் உத்தரவிட்ட படி கர்நாடகம் தமிழக பேச்சுவார்த்தை இனி செல்லாது உச்சநீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஆகிவிடும்.
ஆறுகளும் அணைகளும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சொந்தம் அதில் உள்ள தண்ணீர் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த ஆணையம் அமைக்கப்பட்டு 15 ஆண்டுகாலம் மாற்றம் செய்ய முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
எந்த அணையும் அங்கு கட்ட முடியாது சுற்றுச்சூழல் துறை மத்திய அரசு அனுமதி வழங்காது.
கர்நாடக முதலமைச்சர் விரித்து உள்ள தீய வலையில் நம் முதலமைச்சர் சிக்கி விட கூடாது.
