சென்னை: சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். சி.வி.சண்முகத்துக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காததால் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆவேசம் அடைந்துள்ளனர். ஈபிஎஸ் இல்லாததால் ராஜினாமா கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மேலாளரிடம் வழங்கினர்.
சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் ராஜினாமா
