Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பல்வேறு கோரிக்கை… கோவையில் ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல்…

கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மண்டலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்றவர்கள் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு தலைமை போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு 500 – க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குறிப்பாக 104 மாத பஞ்சபட் உயர்வு உடனடியாக வழங்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்பு அமுல் செய்ய வேண்டும் என கோரிக்கை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றதால் மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஊட்டி, மேட்டுப்பாளையம் செல்ல கூட வாகனங்கள் செல்ல முடியாமல் சிறிது நேரம் பாதிப்படைந்தது பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக முதல்வர் 100 நாட்களில் இந்த பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரும் என தெரிவித்துள்ள நிலையில் எதுவும் செய்யவில்லை என வேதனை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!