Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை…… ஊராட்சி தலைவர் குண்டாசில் கைது

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், மணஞ்சேரி, ஆற்றங்கரை தெரு என்ற முகவரியில் வசிக்கும் கிட்டப்பா என்பவரின் மகன் பெரியவன் என்கிற முருகன் (44). இவர் கள்ளப்புலியூர் ஊராட்சித் தலைவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

சமீபத்தில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக முருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சிறையில் உள்ள   முருகனிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!