Skip to content

மாணவர்களை அடித்து தாக்கிய சத்துணவு ஊழியர்… பெற்றோர்கள் முற்றுகை

கோவை, பொள்ளாச்சி அடுத்த கிழவன்புதூர் பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் சுமார் 48 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு அதிக காரத்துடனும், உண்ணமுடியாத அளவிற்கு இருப்பதால் மாணவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவை சாப்பிடவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பளியில் பணியாற்றும் சத்துணவு ஊழியர் கவிதா என்பவர்,மாணவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை வீசி எறிவதாகவும், மாணவர்களை தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும் மாணவர்கள்

பெற்றோர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதை அறிந்த சத்துணவு ஊழியர் கவிதா மாணவ, மாணவிகளை தடியால் அடித்ததில் கை கால்கள் வீங்கியது. பின்னர் ஆத்திரமடைந்த பெற்றோர் இன்று பள்ளியை முற்றுகையிட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி

தலைமை ஆசிரியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவ இடத்திற்கு விரைந்த ஆனைமலை போலீசார் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!