Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஏழை மாணவர்களை படிக்க வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்… பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பு..

பெரம்பலூர் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் மீண்டும் பெரம்பலூரில் போட்டியிடுகிறார் அவர் இன்று பூலாம்பாடி அரும்பாவூர் தழுதாழை கிருஷ்ணாபுரம் போன்ற பல்வேறு கிராமங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்பொழுது கிருஷ்ணாபுரத்தில் பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்கும் பொழுது இந்த ஐந்து ஆண்டுகளில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நான் செய்த திட்டங்களை புத்தகமாக வெளியிட்டு உங்கள் கையில் கொடுத்திருக்கிறேன் ஆனால் இதுவரைக்கும் இதுபோன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்த திட்டங்கள் என்ன என்று எடுத்துக்காட்ட முடியுமா செய்திருக்கிறார்களா நான் தைரியமாக உங்களுக்கு புத்தகம் போட்டு தந்திருக்கிறேன் அது மட்டும் இல்லாமல் ஏழை மாணவர்களை படிக்க வைப்பதில் நான் மிகவும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் அதுபோல மீண்டும் ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ சேவை செய்ய காத்திருக்கிறேன் ஆதலால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் என்னை தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!