நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கியது. செவ்வாய்க்கிழமை விடுமுறை என்பதால் கூட்டம் நடைபெறவில்லை. மற்ற நாட்களில் அதானி பிரச்னை மற்றும் மணிப்பூர் பிரச்னை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் இரு அவைகளிலும்கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவைகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒரு நாள் கூட அவை முழுவதுமாக நடைபெறவில்லை.
இந்த நிலையில் இன்று காலையில் அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் வழக்கம் போல அதானி பிரச்னையை கிளப்பினர். இதனால் இன்றும் அமளி ஏற்பட்டது. எனவே சபாநாயகர் ஓம்பிர்லா சபையை 12 மணி வரை ஒத்திவைத்தார். மாநிலங்களவையை திங்கட் கிழமை காலை வரை அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் ஒத்திவைத்தார்.