Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரத்தநாடு முன்னாள் எம்எல்ஏ எம்.இராமச்சந்திரன் மறைவு… உதயநிதி இன்று மாலை நேரில் அஞ்சலி

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் என அழைக்கப்படும் எம்.இராமச்சந்திரன் இன்று காலை திடீர் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.. தஞ்சாவூர் நாஞ்சில் கோட்டை சாலை ஆர்.எம்.எஸ் காலனி குறிஞ்சி இல்லத்தில் உள்ள அவரது உடலுக்கு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை அஞ்சலி செலுத்த உள்ளார்..

வழக்கறிஞரான திரு.இராமச்சந்திரன் 1946 ஆம் வருடம் பிறந்தவர், 1989-91மற்றும்
1996-2001 வரை திருவோணம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினராகவும், 2016-21 வரை ஒரத்த சட்டமன்ற உறுப்பினர் என மூன்று முறை சட்ட மன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.
மறைந்த எம்.இராமச்சந்திரன் உடலுக்கு தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை.ந்திரசேகரன், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் க.அண்ணாதுரை , மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகர செயலாளர் சண்.இராமநாதன், அவைத்தலைவர் இறைவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் செல்வம், மகேஷ் கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை அவரது சொந்த ஊராக பின்னையூர் கிராமத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெற உள்ளது..

error: Content is protected !!