2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் (நாதக) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான்,“நானும் 15 வருஷமா கத்துறேன்… உன் காதுல வந்து விழ மாட்டேங்குது. உன்னோட பேசுறதுக்கு சுடுகாட்டுல பேசியிருந்தா 10 பொணத்தையாவது எழுப்பி இருக்கலாம். இந்த இனத்தை எழுப்புறது அவ்வளவு கஷ்டமா இருக்கு…
இதுவரை 36 லட்சம் பேரை எழுப்பி இருக்கேன்.ஓசி பஸ்ல போறவங்க… யாரும் தயவுசெஞ்சு எனக்கு ஓட்டு போடாதீங்க. நான் ஏசி பஸ் தருகிறேன், காசு கொடுத்து போங்க.நீ அவனுக்கே ஓட்டு போட்டு என்னை தூக்கி ஓட்டை போட்டே. 15 வருஷமா கத்துறேன். உன் காதுல வந்து விழ மாட்டேங்குது. சை… பெருமா… உனக்கிட்ட பேசினதை சுடுகாட்டுல பேசியிருந்தா பத்து புணத்தையாவது எழுப்பியிருக்கலாம். இந்த இனத்தை எழுப்புறது அவ்வளவு கஷ்டமா இருக்கு.ஏ பாவம்ப்பா… ரொம்ப கத்துனாலும் நாலு புணமாவது எழுந்து நின்னிருக்கும்.
என்னதா பாவம், பிரச்சனைன்னு… 15 வருஷமா இந்த இனத்துக்கிட்ட கத்துறேன். கொஞ்சம் உசுப்பி இருக்கேன். ஒரு 36 லட்சம் பேரை உசுப்பி இருக்கேன்.இந்த வாட்டி எவ்வளவு பேருக்கு மானம், ரோசம், சூடு, சொரணை, வெக்கம், கோபம் எல்லாம் வருது… பார்ப்போம். இது திருவொற்றியூரா இல்ல வெட்டியூரான்னு 23-ம் தேதி முடிவு பண்ணுவோம். மாத்தணும்… எல்லாத்தையும் மாத்தணும். எப்படி மாத்துவோம்? ஜனநாயக நாட்டில், மக்களாட்சி நாட்டில் மக்களுக்கு இருக்கிற கடைசி வலிமை மிக்க ஆயுதம் வாக்கு.
அந்த ஆயுதத்தை அநீதிக்கு எதிராக தூக்கு. அதுதான் நீ செய்ய வேண்டிய மக்கள் ஜனநாயக புரட்சி.ஒற்றை விரலால் உலகம் திரும்பிப் பார்க்கிற மாற்றத்தை நம்மால் செய்ய முடியும்.”சீமானின் இந்த உணர்ச்சிகரமான பேச்சு, திருவொற்றியூர் பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது பேச்சு சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது.தேர்தல் நெருங்கும் நிலையில், சீமான் தனது பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்தி வருவதாக நாதக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
