Skip to content
Home » பெரம்பலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..

பெரம்பலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..

இந்திய தேர்தல் ஆணையத்தின் கால அட்டவணைப்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் இன்று (22.01.2024) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்ட வருவாய் அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர்/சார் ஆட்சியர், பெரம்பலூர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் / வருவாய் வட்டாட்சியர்கள் முன்னிலையில் வெளியிடட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 27.10.2023 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 2,94,314 வாக்காளர்களும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,68,185 வாக்காளர்களும் ஆக மொத்தம் 5,62,499 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

அதன் பின்னர் நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்த பணியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் பேரில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 3334 ஆண் வாக்காளர்களும், 4330 பெண் வாக்காளர்களும், இதர 4 வாக்காளர்களும் 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2721 ஆண் வாக்களர்களும், 3482 பெண் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயற்சி காரணமாக 147.பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 1626 ஆண் வாக்காளர்களும், 1606 பெண் வாக்காளர்களும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 619 ஆண் வாக்காளர்களும், 771 பெண் வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்,

தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின் படி 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் தற்போது 332 வாக்குச்சாவடிகளும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும், ஆக மொத்தம் 652 வாக்குச்சாவடிகள் உள்ளன.

147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடிகளில் மொத்தம் 2,98,750 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,45,293 ஆண் வாக்காளர்களும், 1,53,445 பெண் வாக்காளர்களும், 12 இதர வாக்காளர்களும் உள்ளனர்.

148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்கு சாவடிகளில் மொத்தம் 2,72,998 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,35,008 ஆண் வாக்காளர்களும், 1,37,990 பெண் வாக்காளர்களும், 0 இதர வாக்காளர்களும் உள்ளனர்.

இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 5,71,748 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,80,301 ஆண் வாக்காளர்களும், 2,91,435 பெண் வாக்காளர்களும், 12 இதர வாக்காளர்களும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!