Skip to content
Home » பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி…

பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி…

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதோடு, மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பெற்று சாதனை படைத்து உள்ளது. பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் பெற்றுள்ளனர்.

இதில் மாணவர் திவாகர் 496 மதிப்பெண்ணும், மோனிஷ் மிட்டல் 494 மதிப்பெண்ணும், முத்துக்குமரன் 493

மதிப்பெண்ணும் சஞ்சீவ் முத்தையா 492 மதிப்பெண்ணும் பெற்று சாதனை படைத்து மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவன தலைவர் சிவசுப்பிரமணியம் பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் செயலாளர் விவேகானந்தன், தலைமையாசிரியர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!