Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூரில் டூவீலர் திருடன் கைது …. பைக் பறிமுதல்….

பெரம்பலூர் போலீசார் நான்குரோடு பகுதியில் வாகன தணிக்கையில் நேற்று ஈடுப்பட்டிருந்த போது அதிவேகமாக பைக்கில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குபின் பதில் கூறியதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவன் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, கீழகாடுகரைப்பட்டு கிராமத்தை சேர்ந்த மருதமுத்து மகன் வெள்ளைச்சாமி (29 என்பதும், இவன் தான் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம்தேதி அயிலூர் கிராமம், வஉசி நகரை சேர்ந்தவர் ரவிசந்திரன் மகன் பாலாஜி என்பவரின் பைக்கை திருடிசென்றதும் தெரியவந்தது. இதையடுத்து வெள்ளைச்சாமியை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!