வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. 2 பேர் கைது
திருச்சி திருவரங்கம் பஞ்சக்கரை சாலை ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(வயது21) இவர்கடந்த 27ந்தேதி இரவு 3 வாலிபர்கள் . இவரது வீட்டருகே சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தனர். இதனை பார்த்து விட்டு குணசேகரன் அங்கு வந்து அதைக் தட்டிக் கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த இடத்தை விட்டுச் அங்கிருந்து சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில், 3 வாலிபர்கள் அங்கு
வந்து, குணசேகரனை திட்டி, அவரது வீட்டின் நுழைவாயிலுக்கு அருகே இரண்டு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை மற்றும் மது பாட்டில்களை வீசி, சுவரில் தீ வைத்து, கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டினர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் சம்படத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து திருவரங்கம் ஜெ. ஜெ.நகர் பகுதியை சேர்ந்த பாலபிரியன் (வயது18) மணிகண்டன் (வயது20)ஆகியோரை கைது செய்தனர். மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரவீன் (வயது20) மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்தி முனையில் பணம் பறித்த 2 ரவுடிகள் கைது
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் சூசையப்பார்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்மணிராஜா (வயது29) இவர் நேற்று மேல அம்பிகாபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 ரவுடிகள் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.1000 பணத்தை பறித்து சென்றனர்.இது குறித்த புகார் என்பது அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிகங்கள் பொன்மலை ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த பிரசாந்த் (வயது வயது26 ) அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் ( வயது27 )ஆகிய இருவரை கைது செய்தனர் அவர்களிடம் இருந்த ரூ. 500 பணம் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர்.
இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
திருச்சி உறையூர் டி.டி. ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் ( வயது27 ). திருமணமான இவர் நேற்று நள்ளிரவு சாத்தனூரில் இருந்து எல்.ஐ.சி. காலனி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
