கும்பகோணம் அருகே உமாமகேஸ்வரபுரம் வழி நடப்பில் முன் பகை காரணமாக பெட்ரோல் குண்டு வீச்சு இது தொடர்பாக மூன்று நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர் .
கும்பகோணம் அடுத்துள்ள திருநாகேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த அன்பரசன் பாலகணேசன் ஆகியோர் சமீபத்தில் ஆடு திருடி உள்ளனர். இதில் பாலகணேசன் காவல்துறையினரிடம் அகப்பட்டு கொண்டார். இதற்கு அன்பரசன் காட்டிக் கொடுத்ததே காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் அன்பரசனின் மாமா வீடு கும்பகோணம் அருகே உமாமகேஸ்வரபுரம் வழி நடப்பில் உள்ளது .
நேற்று நள்ளிரவு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று நபர்கள் மூன்று பெட்ரோல் குண்டுகளை

அன்பரசனின் மாமா செந்தில் என்பவர் வீட்டின் மீது வீசினர்.
இதில் ஒரு குண்டு வெடிக்க வில்லை என்றும், இரண்டு குண்டுகள் ரோட்டில் விழுந்து வெடித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரித்து வருகின்றனர்.
மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டு வீசிய மூன்று நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர் .

