Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குன்னூர் விநாயகர் கோயிலின் ரூ.15 கோடி கார் பார்க்கிங் திட்டம் அதிரடி ரத்து

குன்னூர் விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான நிதியிலிருந்து ரூ.10 முதல் ரூ.15 கோடி மதிப்பில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க முந்தைய திமுக அரசு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், நடப்பு சட்டசபைக் கூட்டத்தொடரில் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், “சராசரியாக மாதத்திற்கு வெறும் 500 பக்தர்கள் மட்டுமே வந்து செல்லும் இவ்விநாயகர் கோயிலில், இவ்வளவு பெரிய தொகையில் கார் பார்க்கிங் அமைப்பது தேவையற்றது” என்று கூறினார்.

இதற்குத் தற்போதைய எதிர்க்கட்சி வரிசையில் உள்ள முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நலிவடைந்த திருக்கோயில்களின் நிலையை மேம்படுத்தவும், பக்தர்களின் வசதிக்காகவும், கோயிலின் வருவாயைப் பெருக்குவதற்காகவும்தான் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது என்று அவர் விளக்கம் அளித்தார். இதனால் அவையில் இருவருக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. இந்த விவாதத்தைத் தொடர்ந்து, குன்னூரில் ரூ.15 கோடியில் கார் பார்க்கிங் கட்டும் பணியை முழுமையாக ரத்து செய்வதாகவும், கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தவும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!