பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று திடீரென உயர்ந்திருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டுக்குமே ஏறத்தாழ 3 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை 2.83 அதிகரித்து ஒரு லிட்டர் ரூ. 103.67-க்கும், டீசல் விலை ரூ. 2.86 அதிகரித்து ஒரு லிட்டர் ரூ. 95.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், பெட்ரோல் விலையானது டெல்லியில் ரூ. 3 அதிகரித்து ரூ. 97.77க்கும், கொல்கத்தாவில் ரூ. 3.29 அதிகரித்து ரூ. 108.74க்கும், மும்பையில் ரூ. 3.14 அதிகரித்து ரூ. 106.68-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலையானது டெல்லியில் ரூ. 3 அதிகரித்து ரூ. 90.67-க்கும், கொல்கத்தாவில் ரூ. 3.11 அதிகரித்து ரூ. 95.13-க்கும், மும்பையில் ரூ. 3.11 அதிகரித்து ரூ. 93.14-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
