Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொடைக்கானல் மலைப்பகுதியில் மீண்டும் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் மீண்டும் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு

கொடைக்கானல் மலைப்பகுதி கீழ்மலை கிராமங்களில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனை அதிகாரிகளும் கண்டும், காணாமல் இருந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக உயர் நீதிமன்றம் உத்தரவின் பெயரில், மாவட்ட நிர்வாகம் ஆலோசனைப்படி 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், மக்காத பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவைகள் பயன்படுத்த தடை உள்ளது. இதையடுத்து மலைப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களும், ஜீஸ் வகைகளும் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியில் உள்ள அடிவார சோதனை சாவடி, பண்ணைக்காடு அருகே என 6 இடங்களில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்வதுடன், பசுமை வரியும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான தாண்டிக்குடி, பண்ணைக்காடு பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட 1 லிட்டர், கால் லிட்டர் ஜுஸ், பிளாஸ்டிக் கேனில் அடைக்கப்பட்ட தேன் மற்றும் பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்ட வகைகள் அனைத்தும் விற்பனை செய்யப்படுகின்றது. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கண்டும், காணாமல் கடந்து செல்கின்றனர். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் இல்லா கொடைக்கானலை உருவாக்க முன்வர வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!