Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

என் மனைவியை காப்பாத்துங்க விஜய் சார்..

மனைவியின் மேல்சிகிச்சைக்கு உதவுமாறு நடிகர் முத்துக்காளை முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் அருகே சங்கப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்காளை. துவக்கத்தில் இருந்தே வாழ்க்கையில் கடும் சவால்களை சந்தித்து வந்தார். சிறுவயதில் இருந்தே தற்காப்புக் கலைகளில் ஒன்றான கராத்தேவில் மிகுந்த ஈடுபாடு உடையவர். அதில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். 

பின்னர் ஒரு ஸ்டண்ட் கலைஞராக திரையுலகில் தன் பயணத்தை தொடங்கினார்.பிரபுதேவா நடித்த காதலன் படத்தின் மூலம் டான்சராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் முத்துக்காளை. தொடர்ந்து, வாலி, தவசி, எம்.குமரன், தமிழன், யூத், அன்பே சிவம், திருடா திருடி, வின்னர், நெறஞ்ச மனசு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார்.  ‘என் புருஷன் குழந்தை மாதிரி’ என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுடன் முத்துக்காளை நடித்த ஒரு காட்சி இன்றளவும் அனைவரையும் சிரிக்க வைக்க கூடியது. சமீபத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான லக்கி தி சூப்பர் ஸ்டார் என்ற படத்தில் நடித்திருந்தார். இதனிடையே தற்போது முத்துக்காளை வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், தனது மனைவியின் உயிரை காப்பாற்றி தருமாறு, தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்து பேசியுள்ளார். 

நான் நகைச்சுவை மற்றும் ஸ்டண்ட் நடிகர்முத்துக்காளை, கீழ்ப்பாக்கம் கே.எம்.சி மருத்துவமனையில், எனது மனைவி மாலதி தலையில் ஏற்பட்ட ரத்த கசிவின் காரணமாக, ஆப்ரேஷன் நடந்தது. இது முடிந்து 17 நாட்களுக்கு மேல் ஆகிறது. இந்த ஆப்ரேஷன் சரியாகும் முன்பே அதனால் ஏற்பட்ட விளைவுகள் காரணமாக நுரையீரல் தொற்று உள்ளிட்ட சின்ன சின்ன தொற்றுகள் காரணமாக கடந்த 17 நாட்களாக சுயநினைவின்றி மூச்சு விட சிரமப்பட்டு வருகிறார்.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் உதவுவதற்கு உறவினர்கள் யாருமின்றி தன்னுடைய மனைவியை கவனித்து வருவதாகவும், மேலும் உரிய மேல் சிகிச்சை அளிக்க‌ உதவிட வேண்டும் என தமிழக முதல்வர் ‌ஜோசப் விஜய்‌க்கு கோரிக்கையுடன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.‎17 நாட்களாக தனி ஆளாக போராடுகிறேன். இந்த நேரம் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சார் உதவி செய்தால் நான் நன்றியோடு இருப்பேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உடன் நடிகர் முத்துக்காளை மின்சார கண்ணா, தமிழன், யூத், பகவதி, சுறா போன்ற படங்களில் காமெடி காட்சிகளில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!