Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புனரமைக்கப்பட்ட 103 ரயில்வே ஸ்டேசனை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 புதிய ரயில் நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தில் 508 ரயில் நிலையங்கள் ரூ.24,470 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் முதல்கட்டமாக புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். தமிழகத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் உட்பட 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

தமிழகத்தில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட், சூலூர்பேட்டை, சாமல்பட்டி, சிதம்பரம், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை,போளூர், விருத்தாசலம், மன்னார்குடி, குழித்துறை ஆகிய ரயில் நிலையங்கள் இன்று திறக்கப்பட்டன. புனரமைக்கப்பட்ட புதிய ரயில் நிலையங்களை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

error: Content is protected !!