கிறிஸ்தவ மத தலைவர் 14-வது போப் லியோவின் நுரையீரலில் இருந்த புற்றுநோய் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக வாடிகன் தேவாலயம் தெரிவித்துள்ளது. போப் லியோ விரைவில் முழுமையாக குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வழக்கமான பரிசோதனையில் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்ட இந்த அறுவை சிகிச்சையை தொடர்ந்து, உலக தலைவர்கள் பலரும் போப் ஆண்டவர் விரைந்து நலம் பெற வாழ்த்தி வருகின்றனர்.
போப் லியோ விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து
