Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நெல்லை அம்பையில் தலைமை காவலர் மீது போக்சோ வழக்கு

நெல்லை அம்பையில் தலைமை காவலர் மீது போக்சோ வழக்கு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 8ஆம் வகுப்பு படுக்கக்கூடிய மாணவனுக்குப் தலைமை காவலர் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் புகார் எழுந்த நிலையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் தெற்கு அகஸ்தியபுரத்தை சேர்ந்த அந்தோணி ஜெனிபர்(34) இவர் மணிமுத்தாறு பட்டாலியனில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் காலாண்டு விடுமுறையைக் கழிப்பதற்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்த 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் அம்பாசமுத்திர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர் அளித்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் அந்த சிறுவனை தலைமை காவலர் அழைத்து சென்றது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி தலைமை காவலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்ய முயற்சித்தபோது அவர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள தலைமை காவலர் அந்தோணி ஜெனிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

error: Content is protected !!