Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மண்டாடி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி முதன்மைப் பாத்திரத்தில் நடித்து வெளியான விளையாட்டுக் கதையம்சம் கொண்ட ‘மண்டாடி’ திரைப்படம், அக்டோபர் 8 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

தமிழ்நாடு கடலோரப் பகுதியின் பாரம்பரியப் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், திரையரங்குகளில் வசூல் சாதனைகளைப் படைத்து, உலகளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றிப் படமாக உருவெடுத்தது.

சூரியுடன் இணைந்து மகிமா நம்பியார், சத்யராஜ், மிதுன் ஜெய் சங்கர், ரவீந்திர விஜய், பாலா சரவணன் மற்றும் ஸ்டன் சிவா ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

திரையரங்குகளில் கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம், இந்திய அளவில் ரூ. 100 கோடியையும், உலகளவில் ரூ. 150 கோடி வசூலையும் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சூரி கதாநாயகனாக நடித்த படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ‘மண்டாடி’ சாதனை படைத்துள்ளது.

error: Content is protected !!