சிவகங்கை: காரைக்குடி வடக்கு காவல் நிலைய தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் அழகு சுந்தரம் இவர் நேற்று இரவு செக்போஸ்ட் பணி முடித்துவிட்டு இலுப்பை குடியில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் காரைக்குடி நோக்கி வந்த போது வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி அருகே வாகன விபத்தில் போலீஸ் ஏட்டு பலி… சோகம்
